இதப்படிங்க முதல்ல...
மீண்டும் காதல் கதைக்கு திரும்பிய, மணிரத்னம்!கமல், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கிய, தக்லைப் படம், அதிர்ச்சி தோல்வியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் அதே போன்று, 'கேங்ஸ்டர்' கதையை படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தவர், தற்போது அதை கிடப்பில் போட்டு விட்டு, ஒரு காதல் கதையை கையில் எடுத்திருக்கிறார்.இன்றைய இளைஞர்களின் காதல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை சொல்லும் கதையில், அந்த படத்தை இயக்கும், மணிரத்னம், இதில், விக்ரமின் மகனான, துருவ் விக்ரமை நாயகனாக நடிக்க வைக்கிறார்.சினிமா பொன்னையா'மல்டி ஹீரோ' கதை தேடும், அதர்வா!அதர்வா நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வியை கொடுத்து வருவதால் தற்போது, சிவகார்த்திகேயன் நடித்து வரும், பராசக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதர்வா.அடுத்தடுத்து முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் இன்னொரு, 'ஹீரோ' வேடங்களில் நடித்து, தன் மார்க்கெட்டை உயர்த்திக் கொள்வதற்காக தீவிரம் காட்ட துவங்கி இருக்கிறார். அதோடு, 'இதே, பராசக்தி படத்தில், ரவி மோகன் வில்லனாக நடிப்பது போன்று, எனக்கு, 'செட்' ஆகக்கூடிய வில்லன் வேடங்களில் நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன்...' என்கிறார், அதர்வா.சி.பொ.,தமிழுக்கு வரும், மிருணாள் தாக்கூர்!ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில், 'பிசி'யாக நடித்து வரும், மிருணாள் தாக்கூரை, தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர், சில இயக்குனர்கள். ஆனால், காட்சி வாரியாக கதை கேட்ட அவருக்கு, எந்த கதையும் திருப்தி கொடுக்கவில்லை.இதையடுத்து, தேடிவந்த தமிழ் படங்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறும் மிருணாள் தாக்கூர், 'தற்போது, அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கும் படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் மூலம் தமிழில் கால் பதிப்பேன்...' என்கிறார்.எலீசாதோல்வியை கண்டு அஞ்சாத, ருக்மணி வசந்த்!விஜய் சேதுபதியுடன், ஏஸ் என்ற படத்தில் அறிமுகமான கன்னட நடிகை, ருக்மணி வசந்த், அந்த படம் தோல்வி அடைந்த போதும், கன்னட சினிமாவுக்கு திரும்பிச் செல்லாமல், கோலிவுட்டிலேயே, 'டேரா' போட்டிருக்கிறார்.தற்போது, சிவகார்த்திகேயனுடன், மதராஸி படத்தை அடுத்து, விக்ரமுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.'முதல் படம் தோல்வி என்றபோதும், எப்படியும் தமிழிலும் சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் உள்ளேன். இதே தமிழ் சினிமாவில், 'நம்பர் ஒன்' நாற்காலியில் உட்காராமல் நான், கர்நாடகத்துக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்...' என்கிறார், ருக்மணி வசந்த். — எலீசாவில்லனாகும், நாகார்ஜுனா!ரஜினியின், கூலி படத்தில் முதன்முதலாக வில்லனாக நடித்திருக்கிறார், தெலுங்கு நடிகர், நாகார்ஜுனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தனக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தால், எதிர்காலத்தில் பல மொழிகளில் தயாராகும் பிரமாண்ட படங்களில் வில்லனாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளார்.மேலும், தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் தன் மகன்களான நாகசைதன்யா மற்றும் அகில் ஆகியோருடனும், அடுத்தபடியாக தான் வில்லனாக நடிக்க போவதாகவும் கூறுகிறார், நாகார்ஜுனா.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!தன் ஆத்துக்கார இயக்குனரின் படத்தில் நடிப்பதாக சொல்லி, பின், கதை பிடிக்கவில்லை என, தல நடிகர் பின்வாங்கிய போது, அவருக்கு எதிராக கொந்தளித்ததோடு, அவரது நடிப்பையும் கண்டபடி விமர்சித்தார், தாரா நடிகை.அச்சமயம், மேற்படி நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என, அம்மணிக்கு இயக்குனர் ஒருவர் அழைப்பு விடுத்தபோது, உடனே, 'கிரீன் சிக்னல்' போட்டு உள்ளார்.ஆனால், இதற்கு தாராவின் ஆத்துக்காரர் தடை போட்டபோதும், ஏற்காமல், 'உங்கள் படத்தில், தல நடிக்காதது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதனால், அதை மனதில் கொண்டு அவருடன் இணைந்து நடிப்பதற்கு ஒருபோதும் நான் மறுக்க மாட்டேன். சரிந்து வரும் என் மார்க்கெட்டை காப்பாற்ற, தல நடிகரின் படம் தேவைப்படுகிறது...' என, 'கண்டிஷன்' ஆக சொல்லியுள்ளார், தாரா நடிகை.சினி துளிகள்!* நடிகர் ரஜினிகாந்த் தன் கையில், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்து உள்ளார்.* மூக்குத்தி அம்மன் -2 படத்தை அடுத்து, மீண்டும் தன்னை கதையின் நாயகியாக வைத்து பல மொழி படங்களை இயக்க, சில வேற்று மொழி இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், நயன்தாரா.அவ்ளோதான்!