உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பேருந்தில் பயணிப்பவர்களே...இ ருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக, திருமணமான புது ஜோடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.திடீரென, முன்னால் சென்று கொண்டிருந்த புதுமண ஜோடியின் வண்டி தாறுமாறாக சென்று, நடுரோட்டில் கவிழ்ந்து, ஆளுக்கொரு புறம் விழுந்தனர். நான், என் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, வேகமாக ஓடினேன். எனக்கு பின் பலர் ஓடி வந்தனர்.அவர்கள் இருவருக்கும் பலமான காயம். நல்லவேளை பின்னால், பெரிய வண்டி எதுவும் வரவில்லை.'என்னாச்சுங்க, 'பிரேக்' பிடிக்கலையா?' என்று கேட்டேன், 'வண்டியெல்லாம் நல்லாயிருக்குங்க. முன்னாடி போன பேருந்திலிருந்து யாரோ கூல்டிரிங்ஸ் குடித்து விட்டு, காலி பாட்டிலை வீசியிருக்கின்றனர். அது, என் முகத்தில் வேகமாக வந்து அடிக்கவே, என் கை, வண்டியிலிருந்து நழுவிடுச்சு...' என்றார்.அவர்களை ஆம்புலன்ஸில், மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவர்களது வண்டியை ஓரமாக நிற்க வைத்து, என் வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன்.பேருந்தில் பயணிப்பவர்களே... நீங்கள் எது சாப்பிட்டாலும், குடித்தாலும், காலியானதை ஒரு பையில் போட்டு, நீங்கள் வண்டியை விட்டு இறங்கியதும், குப்பைத்தொட்டியில் போட்டு விடுங்கள். யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் பயணம் செய்வது இனி உங்கள் பொறுப்பு.— பெ.லோகநாதன், தர்மபுரி.விபரீதத்தை விலை கொடுத்து வாங்காதீர்!ச மீபத்தில், என் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அத்திருமணம், கடற்கரையை ஒட்டிய, 'ரிசார்ட்' ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முகூர்த்த நேரத்தில், வந்திருந்த அனைவரையும் அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து போனார், நண்பர்.வித்தியாசமான முறையில், படகில் அமர்ந்து, கடல் மேல் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டான் மகன் என்பதற்காக, அதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார், நண்பர்.எல்லாரும் கரையில் அட்சதையோடு காத்திருக்க, தயாராக இருந்த, இரண்டு படகுகளில் ஒன்றில், புரோகிதரோடு மணமக்களும், இன்னொன்றில் மணமக்களின் பெற்றோரும் ஏறிக்கொண்டு, கடலில் சிறிது துாரம் சென்று படகை நிறுத்தினர்.தாலி எடுத்துக் கொடுக்க எழுந்த போது, நிலைத்தடுமாறிய புரோகிதர், கடலில் தலைகுப்புற விழுந்துவிட, எல்லாருமே பதறி விட்டோம். நல்லவேளையாக, 'லைப் ஜாக்கெட்' அணிந்திருந்ததால், உயிருக்கு ஆபத்தின்றி, படகோட்டியால் காப்பாற்றப்பட்டார்.இந்நிகழ்வால், அதுவரை மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையே மாறிவிட்டது.எதையும், வித்தியாசமாக செய்ய வேண்டுமென ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அப்படி செய்வதிலுள்ள விபரீதங்களையும் யோசித்து, முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. — வெ.பாலமுருகன், திருச்சி.இல்லம் தேடி தையல்!எ ங்கள் பகுதியில், 'கேரவன்' போன்ற வடிவமைப்பில், ஒரு வேன் வந்து நின்றது. 'சுடிதார், பேன்ட், ஷர்ட், ஜாக்கெட், யூனிபார்ம் தைக்க வேண்டுமா? ஒரு மணி நேரத்தில் தைத்து தருகிறோம்...' என, வேனில் ஒலிபெருக்கி குரல் ஒலித்தது.இதைக்கேட்டு ஓரிருவர், வேன் அருகில் வந்தனர். வேனில் இருந்த ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் வந்தவர்களிடம் துணிகளை வாங்கி, அளவெடுத்து, உரிய வடிவத்தில் வெட்ட, பவர் மெஷினில் கண்முன் தையல் வேலை சூடு பிடித்தது.வேனுக்குள்ளேயே காஜா பட்டன் மெஷின், ஓவர்லாக் மெஷின், தையலுக்கு தேவையான பொருட்கள், அயர்ன் பாக்ஸ் என, அனைத்தும் இருந்தது.காலை 8:00 மணி அளவில் துவங்கப்பட்ட தொழில், நேரம் ஆக ஆக பரபரப்பாக இயங்க ஆரம்பித்தது. மாலை, 4:00 மணிக்குள்ளாக யூனிபார்ம் பேன்ட் ஷர்ட், சுடிதார், ஜாக்கெட் என, துணி தைத்து முடித்து, 'டெலிவரி' செய்யப்பட்டு, பணமும் கைக்கு வர ஆரம்பித்து விட்டது.அடுத்த இடம் நோக்கி வேன் புறப்படத் தயாரான போது, வாகன ஓட்டுனரும், உரிமையாளருமான நபரிடம் விபரம் கேட்டேன்.'இதுவும் ஒரு, 'சீசனல் பிசினஸ்' தான், சார். பிறகு தைத்துக் கொள்ளலாம் என, பண்டிகைகளுக்கான உடை தைப்பதில் இருந்து, பள்ளிச் சீருடை வரை, முதலில் அசட்டையாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் தையல்காரரை அணுகி, அவரை அவசரப்படுத்தி, 'டென்ஷன்' ஆக்குவர்.'அதிக ஆர்டர்கள் வந்தாலும் குறித்த காலத்தில் கொடுக்காவிட்டால் பிரச்னை என்பதால், சில தையல்காரர்கள் துணிகளை வாங்க மறுத்து, திருப்பி அனுப்புவதும் உண்டு.'எனவே, 'இல்லம் தேடி கல்வி' போல், 'இல்லம் தேடி தையல்' என, பண்டிகைகள், பள்ளி திறப்பு, முகூர்த்த நாட்கள் வருவதற்கு முன்பாகவே, நாங்களும் ஊர் ஊராக பயணப்பட்டு, தொழில் போட்டிகளை சமாளித்து முன்னேற முடிகிறது...' என்றார், உரிமையாளர்.- தி. பூபாலன், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !