உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

திறமையை வைத்து பணம் சம்பாதிக்கலாம்!கிராமத்திலுள்ள, நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த போது, சில இளைஞர்கள் தாமரை மலர் வளர்ப்பு குறித்து, நண்பருடன் கலந்துரையாடி கொண்டிருந்தனர்.சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நான், பின்னர் அதைப்பற்றி, நண்பரிடம் விசாரித்தேன்.அதற்கு அவர், 'எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சின்ன சின்ன குட்டைகள், குளங்கள் பல உள்ளன. அவற்றில் நீச்சல் தெரிந்த இளைஞர்கள், குழுவாக இணைந்து, தாமரை கொடி வளர்க்கின்றனர். சில குளங்களில் மீன்களையும் வளர்க்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. எங்கள் தோப்பில் இருக்கும் குட்டையிலும், தாமரை வளர்க்க அனுமதி கேட்டு தான் அவர்கள் வந்திருந்தனர்.'படித்து வேலை கிடைக்காததால், தங்களின் நீச்சல் திறமையை அடிப்படையாகக் கொண்டு, குளம் மற்றும் குட்டை வைத்திருப்பவர்களிடம் அனுமதி பெற்று, அவற்றை சுத்தம் செய்து, தாமரை பூ மற்றும் மீன் வளர்த்து வருமானம் ஈட்டுகின்றனர். நீர்நிலை உரிமையாளருக்கும் ஒரு தொகை வழங்குகின்றனர்.'எங்கள் குளம் பல நாட்களாக ஆகாயத் தாமரையால் மூடப்பட்டு பயன்பாடின்றி இருக்கிறது. அதை, அவர்களிடம் ஒப்படைத்தால், குளம் சுத்தமாகும்; அவர்களுக்கும் பயன் கிடைக்கும் என்று நினைத்து, அந்த இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டேன்...' என்றார், நண்பர்.படித்து வேலைவாய்ப்பு இல்லாத அந்த இளைஞர்களின் வித்தியாசமான முயற்சியையும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும், மனதார பாராட்டினேன்.- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.அழைப்பிதழுடன் 'இயர்புக்!'ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், தன் மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க, எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தார்.திருமண அழைப்பிதழுடன், அட்டைப் பெட்டிகளில் ஸ்டீல் பாத்திரங்கள், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் மற்றும் ஆண்டுமலர் புத்தகங்களையும் வைத்திருந்தார்.இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, 'புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டாதவர்களுக்கு அழைப்பிதழுடன், எவர்சில்வர் பாத்திரம் கொடுக்கிறேன்.'கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் போது, ஆண்டுமலர் புத்தகம் கொடுக்கிறேன்.'சுயதொழில், தனியார், அரசுப்பணி, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, நிதிசார்ந்த, தன்னம்பிக்கை, துணுக்கு, கட்டுரை, திருக்குறள் மற்றும் ஆன்மிகம் என, பல தலைப்புகளில் உள்ள புத்தகங்களை அழைப்பிதழுடன் கொடுத்து வருகிறேன்...' என்றார்.அழைப்பிதழுடன் பரிசுப் பொருட்கள் வழங்க நினைப்பவர்கள், மாற்று யோசனையாக புத்தகங்கள் வழங்கலாமே!- வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.முதல் மூன்று நிமிடங்கள் முக்கியம்!எங்கள் வீட்டுக்கு எதிரில், ஒரு தம்பதியர் வசிக்கின்றனர். சமீபத்தில் அவர்கள், நான்கு நாட்கள் சுற்றுலா சென்று, திரும்பி இருந்தனர். மறுநாள், அந்தப் பெண் இறந்து போய் விட்டார்.இரவில், பாத்ரூம் சென்ற மனைவி, வெகுநேரம் ஆகியும் வரவில்லையே என்று, கணவர் போய் பார்த்தால், அங்கேயே குப்புற விழுந்து கிடந்தாராம். உடனே மருத்துவர் வந்து பார்த்து, இறந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.இந்த திடீர் மரணத்துக்கு காரணமாக, அந்த மருத்துவர் சொன்னது இதுதான்:இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தால், சட்டென எழுந்து, பாத்ரூம் சென்று, வேகமாக சிறுநீரை வெளியேற்றக் கூடாது. நடுஇரவில் எழும்போது, முதல் மூன்று நிமிடங்கள் மிகவும் முக்கியம்.இரவு துாக்கத்தில், நம் உடல் உறுப்புகள் ஓய்வாக இருக்கும். அதனால், படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து, சிறிது நேரம் நிதானப்படுத்தி கொள்ள வேண்டும். பின், கை, கால்களை லேசாக அசைத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்படி செய்த பின், பாத்ரூம் சென்று, மெதுவாக சிறுநீர் கழிக்க வேண்டும்.உடல் ஆரோக்கியமாக இருந்தவர், திடீரென இறந்து போவதற்கு காரணம் இது தான்.வயது முதிர்ந்தோரே... மருத்துவர் கூறியதை கடைப்பிடியுங்கள்.- ஜெயா சம்பத், கொரட்டூர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !