கண்ணனின் கையில் வெண்ணெய் ஏன் தெரியுமா?
பாலை காய்ச்சி உறை ஊற்றுவதால் தயிராகிறது. தயிருக்குள், மோர், வெண்ணெய், நெய் உள்ளன. ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பக்குவம் செய்தால் தான் பார்க்க முடியும். நம்முள் உள்ள இறைவனை காணவும், நமக்கு பக்குவம் தேவை. இதை உணர்த்தவே, பகவான் கண்ணன் கையில் வெண்ணெய் உள்ளது.கண்ணன் மூன்று குழந்தைகளை காலால் மிதித்து ஏறி, பானையில் உள்ள வெண்ணெயை எடுத்து உண்ணும் காட்சியை திரைப்படங்களில் காணலாம். அதில் ஒரு தத்துவம் கூறப்பட்டுள்ளது.இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி என்ற மூன்றும் தான், அந்த குழந்தைகள். அவற்றை மிதித்தபடி நின்று அகம், கல்மசம் மற்றும் மாயா ஆகிய, மூன்று மாய கயிற்றுக்குள் இருக்கும் மனம் என்ற பானையிலிருந்து பக்தி எனும் துாய வெண்ணெயை கிருஷ்ணன் எடுத்துச் சாப்பிடுகிறான் என்பது தத்துவம்.