உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!

பாரதத்தின் உரிமைகளைபெற்றுயர்ந்த நாள்உரிமைதனைப் பெற்றுயர கடமை செய்யும் நாள்!புவியெல்லாம் நம் திறனைபுரிந்து கொள்ளும் நாள்புரிந்துணர்ந்து அன்னியர்கள் தெரிந்தளித்த நாள்!பட்ட துயர் விட்ட உயிர்பெற்றுத் தந்த நாள்ஒட்டுமொத்த வெள்ளையரை ஓட வைத்த நாள்! சத்தியமே உருவெடுத்துவந்த தலைவர்கள் சாதிப்பதைச் சபதமேற்க தேர்ந்தெடுத்த நாள்! அகிம்சை என்ற ஆயுதமே அறிவு கண்ட நாள்அகிம்சையோடு ஆற்றலெல்லாம் தந்து விட்ட நாள்! உரிமையென்று பெற்றதனால்உறங்கிட வேண்டாம்கணக்குகளில் கடமைதனைகண்டெடுத்த நாள்! இன்னும் உண்டு எத்தனையோ காலமும், வாய்ப்பும்ஏற்றுக் கொண்ட குடியரசில் ஏற்றங் காட்டுவோம்! குடியரசு நாளிதனைகொண்டாடுவோம்முடியாத செயல்களையும் முடித்துக் காட்டுவோம்!— சி. என். நாகராஜன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !