கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!
எங்கேயும் தேட வேண்டாம்நம்மிடமே இருக்கிறது மன நிறைவில் சந்தோஷம்!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுவளமான வார்த்தையில் வாய்மை!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுபொறாமையற்ற மனதில்அமைதி!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுபொய்மையை தவிர்த்தஉண்மை!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுஉறுதியான வெற்றிக்கு உழைப்பு!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுகருணை வடிவில் மனிதாபிமானம்!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுகுழந்தை வடிவில்தெய்வம்!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுஉழைப்புக்கான மூலதனம்பொறுமை!எங்கேயும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறதுவெற்றிக்கான காரணிகள்! உண்மை, கருணை, பொறுமை, உழைப்புமுயற்சியில் கிடைக்கும் வெற்றிநம் மனதின் எண்ணம் போல!— ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி