உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

மே 1 - உழைப்பாளர் தினம்!* உழவன் எனும் உழைப்பாளிநிலமற்றவர்களுக்கும் சேர்த்தே வியர்வை சிந்தி சேற்றில் பாடுபட்டுஉண்ணச் சோறு போடுகிறான்!* ஆசிரியர் எனும் உழைப்பாளி கட்டுப்படாதவர்களுக்கும் சேர்த்தேசிரத்தையோடு பாடங்களை கற்பித்து சிந்தையில் அறிவை புகட்டுகிறான்! * மருத்துவன் எனும் உழைப்பாளிஅக்கறையற்றவர்களுக்கும் சேர்த்தே புதுப் புது நோய்களோடு போராடிவிலைமதிப்பற்ற உயிரை மீட்கிறான்!* துப்புரவாளர் எனும் உழைப்பாளிபொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்தே இரவு, பகலாய் துாய்மை பணி செய்து ஈடில்லா ஆரோக்கியம் காக்கிறான்!* பத்திரிகையாளன் எனும் உழைப்பாளிபயந்தாங்கொள்ளிகளுக்கும் சேர்த்தே உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்து அளிக்கிறான்! * ஓட்டுனர் எனும் உழைப்பாளி உறங்குபவர்களுக்கும் சேர்த்தே கண் விழித்து கவனமாய் வாகனம் இயக்கி ஊர் கொண்டு போய் சேர்க்கிறான்!* இன்னும் பலவகை உழைப்பாளிகள் வீட்டுக்கும், நாட்டுக்கும் சேர்த்தே அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதை ஆண்டில் ஓர் நாளிலாவது மதித்துநன்றியோடு போற்றுங்கள்!- வெ.பாலமுருகன், திருச்சி.தொடர்புக்கு : 89735 19952


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !