உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: ஒதுங்கி நின்றுவிடாதே!

ஒதுங்கி நின்றுவிடாதே! உயர்ந்து நிற்பவனை பார்த்து உன்னிடம் தாழ்வான பொறாமை எண்ணம் ஏன்? சிகரத்தின் உச்சியை நீ எட்டித் தொட சளைக்காத சாதனை முயற்சி அவசியம் தானே? மலிவானது கிடைத்துவிட்டால் விலைமதிப்பற்றதாகிவிடும் அது வைரமாகவே இருந்தாலும்! கடின உழைப்புக்கு பின் கிடைத்தால் அதன் அருமை உனக்கு புரியும் அது கரியாகவே இருந்தாலும்! தடை தாண்ட எத்தனிப்பவனுக்கே வெற்றிக் கோட்டைக்கான வழிகள் திறக்கும்! எப்படி முன்னேறுவது என்பது விடை தெரியாத கேள்வி அல்ல விடாமுயற்சி ஒன்றே அதற்கு வழி! மடைதிறந்த வெள்ளமாக இடைவிடாமல் பயணம் செய் மாண்டொழியும் தோல்விகள் மீண்டெழலாம் சாதனையாளனாக! வாழ்வில் எந்த இடத்தில் நிற்கிறாய் என்று உன்னை நீயே அடிக்கடி உற்றுப்பார்! வாழ்வின் நிதர்சனம் உனக்கு புரியும் உற்சாக உத்வேகம் தன்னால் பிறக்கும்! எந்த எல்லையையும் உன்னால் எட்டித் தொட்டு விட முடியும் அதற்கு இந்த நொடியே சாத்தியம்! ஒப்பீட்டு அளவுகோலால் ஒதுங்கி நின்றுவிடாதே மட்டற்ற மகிழ்ச்சியுடன் செயல்படு எண்ணற்ற வெற்றிகளைக் குவித்திடு! - ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !