கவிதைச்சோலை: குறையில்லை என்றால்...
உறவுகளில் குறையில்லை என்றால் பாசமும் நிலையாக இருக்கும்! நட்பில் குறையில்லை என்றால் துணையும் எப்போதும் கிடைக்கும்! அன்பில் குறையில்லை என்றால் இல்லறமும் இனிமையாய் அமையும்! கல்வியில் குறையில்லை என்றால் ஞானமும் ஆழமாக வேரூன்றும்! பேச்சில் குறையில்லை என்றால் மரியாதையும் தானே உயரும்! உடலில் குறையில்லை என்றால் ஆரோக்கியமும் நீடித்து நிலைக்கும்! உழைப்பில் குறையில்லை என்றால் உயர்வும் உறுதியாய் வரும்! முயற்சியில் குறையில்லை என்றால் வெற்றியும் தானாக சேரும்! - டி.எல்.குமார், விழுப்புரம்.