உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: கதிரவனாக ஒளிவீசுகிறீரே!

ஏற்றமிகு கனவுகளை நெஞ்சில் ஏந்தியவரே எளிய குடும்பத்தில் பிறந்து எல்லையற்ற உயரம் தொட்டவரே எங்களையும் உங்களைப் போல் உயரக் கற்றுக் கொடுத்தீரே! கடற்கரை மணற்பரப்பில் கனவுக் கோட்டை கட்டியவரே கனவை நனவாக்கி காலத்தை வென்றவரே உலகுள்ளவரை அழியாத மாமனிதராக நிலைத்தீரே! 'கனவு காணுங்கள்' என்ற நம்பிக்கை விதைத்தவரே குனிந்து வாழ்ந்தவர்களை நிமிர வைத்தவரே சொல்லாலும் செயலாலும் குருவாக மாறினீரே! எளிமையின் எழில் உருவாய் எந்நாளும் வாழ்ந்தவரே எந்த உயர்ந்த பதவியிலும் அடக்கமாய் இருந்தவரே இளைஞர்கள் யாவருக்கும் லட்சிய தீபம் ஏற்றினீரே! முயற்சியின் பெருமையை உலகறியச் செய்தவரே நேர்மையான பாதையை மக்களுக்குக் காட்டியவரே உழைப்பில் தான் உயர்வென உணர்த்திச் சென்றீரே! நாட்டின் நலன் நினைத்து நாளும் துடித்தவரே எதிர்காலத் தலைமுறையை கல்விக்கு உந்தியவரே எல்லார் இதயங்களிலும் நிலைத்து நிற்கிறீரே! மனித நேயத்தின் முத்திரையை மண்ணில் பதித்தவரே மாற்றத்தின் முகமாகி மனதில் நிறைந்தவரே மறைந்தாலும் மறையாமல் கதிரவனாக ஒளிவீசுகிறீர்! - ஆர்.செந்தில்குமார், மதுரை. தொடர்புக்கு : 95977 81744


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !