உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: அகன்று போய்விடும்!

அகன்று போய்விடும்! பொறாமை குடிபுகும் மனதில் உழைப்பும் தேடலும் அகன்று போய்விடும்! ஆத்திரம் குடிபுகும் மனதில் அன்பும் மனிதமும் அகன்று போய்விடும்! பேராசை குடிபுகும் மனதில் திருப்தியும் நிம்மதியும் அகன்று போய்விடும்! பொய்மை குடிபுகும் மனதில் உண்மையும் நம்பிக்கையும் அகன்று போய்விடும்! ஆணவம் குடிபுகும் மனதில் பணிவும் மரியாதையும் அகன்று போய்விடும்! சோம்பல் குடிபுகும் மனதில் முயற்சியும் ஊக்கமும் அகன்று போய்விடும்! வெறுப்பு குடிபுகும் மனதில் கருணையும் இரக்கமும் அகன்று போய்விடும்! சுயநலம் குடிபுகும் மனதில் பகிர்வும் பெருந்தன்மையும் அகன்று போய்விடும்! அச்சம் குடிபுகும் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அகன்று போய்விடும்! வஞ்சகம் குடிபுகும் மனதில் நேர்மையும் நல்லெண்ணமும் அகன்று போய்விடும்! அவசரம் குடிபுகும் மனதில் நிதானமும் தெளிவும் அகன்று போய்விடும்! நற்குணம் குடிபுகும் மனதில் துக்கமும் துயரமும் அகன்று போய்விடும்! - ஆர்.செந்தில்குமார், மதுரை. தொடர்புக்கு:9597781744


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !