உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - லிச்சி!

லிச்சி பழத்தில் வைட்டமின் சி, பி6, நியாசின், ரிபோபிளவின், போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்து, புரதம், 'பாலிபீனாலிக்' கூறுகளும் அதிக அளவில் உள்ளன. லிச்சி பழத்தில், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானப் பிரச்னைகளை போக்கும் தன்மையுடையது. சிறந்த செரிமானத்தின் மூலம், குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது. லிச்சியில் உள்ள வைட்டமின் சி, சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகவும், வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்கவும், கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. இதனால், புற்றுநோய், இதயநோய், விரைவான வயது மூப்பு போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம். லிச்சியில், 'பொட்டாஷியம்' அதிகமாக காணப்படுகிறது. அதனால், உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது. உலர்ந்த லிச்சியின், 'பொட்டாஷியம்' அளவு, 'பிரஷ்' லிச்சியை விட, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். லிச்சி பழத்தில் தாமிரம் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில், பொதுவாக இரும்பு சத்துக்களுடன், தாமிரமும் இணைந்திருக்கும். இதனால், லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் புத்துணர்ச்சி அடையும். மேலும், உடல் உறுப்புகளுக்கும், செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்க பெறும். லிச்சியில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. - ஏ.எஸ்.கோவிந்தராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !