ஓணம் ஸ்பெஷல்!
அடை பிரதமன்தேவையானவை:பச்சரிசி - ஒரு சுப், வெல்லம் - 150 கிராம், ஜவ்வரிசி 25 கிராம், தேங்காய் - ஒன்று, முந்திரி, திராட்சை தலா 10, ஏலப்பொடி - அரை தேக்கரண்டி, நெய்- தேவையான அளவு.செய்முறை:தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து மையாக அரைக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி, பச்சரிசி மாவை மெல்லிய அடையாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட்டு வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் அடை துண்டுகளுடன், ஜவ்வரிசி, வெல்லக் கரைசல், தேங்காய்ப் பால், சிறிது நெய் சேர்த்து கொதிக்க விடவும். கீழே இறக்கி, ஏலப்பொடியையும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்எரிசேரி!தேவையானவை:வாழைக்காய் ஒன்று, சேனைக் கிழங்கு 250 கிராம், தேங்காய்த்துருவல் - ஒரு கப், மிளகு - ஒன்றரை தேக்கரண்டி, மஞ்சள் துாள், மிளகாய்த்தூள் தலா அரை தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய், உப்பு தேவையான அளவு, தாளிக்க, கறிவேப்பிலை, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சிறிதளவு.செய்முறை:சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காயை தோல் சீவி, மெலிதாக தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும். சேனையை நன்கு கழுவி, அரை வேக்காடு வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பாதி வேகவைத்த சேனை, வாழைக்காய், மஞ்சள் துாள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு, உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.இத்துடன், முக்கால் சுப் தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்து கலக்கி கொதிக்க விடவும். கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும். மீதி தேங்காயை எண்ணெயில் சிவக்க வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.ஓலன்!தேவையானவை:வெண் பூசணி -இரண்டு கீற்று, ராஜ்மா அல்லதுபச்சைப்பயறு 150 கிராம், தேங்காய்த்துருவல் -ஒரு கப், பச்சை மிளகாய் -நான்கு பொடியாக நறுக்கி கொள்ளவும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு. செய்முறை:ராஜ்மாவை குழையாமல் வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். வெண் பூசணியை தோல் நீக்கி சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேக விடவும்.தேங்காயை பால் எடுத்து சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து இறக்கி பரிமாறவும்