பஞ்சமுக ஆஞ்சநேயரின் தரிசன பலன்கள்!
பராக்கிரமம், பணிவு, பக்தி, பாத சேவை மற்றும் பலம் என, பல அற்புத குணங்களின் அவதாரம் அனுமன். அவரை சில நிமிடங்கள் தியானித்தாலே போதும். நமக்கு நன்மைகளை அள்ளித் தருவார்.சகல சவுபாக்கியங்களையும் தரும் அனுமனை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்: கிழக்கு முகம் - ஆஞ்சநேயர் : சகல காரியங்களில் வெற்றியும், தைரியமும், காரிய சித்தியும் அளிக்கும்தெற்கு முகம் - நரசிம்மர் : சகல தோஷங்களும் நீங்கும். இனம் புரியா பயம், கலக்கம், துர்சக்திகள் விலகும்மேற்கு முகம் - கருடர் : சரும நோய், விஷம், பாவத்தால் ஏற்பட்ட வியாதிகள் நீங்கும்வடக்கு முகம் - வராஹர் : தீராத கஷ்டங்கள் தீரும். இனம்புரியாத நோய்கள் நீங்கும் ஆகாயத்தை பார்க்கும் முகம் - ஹயக்ரீவர் : வாக்கில் வன்மையும், சகல கலைகளில் தேர்ச்சியும், சிறந்த அறிவுத்திறனும் கிடைக்கும்.