உள்ளூர் செய்திகள்

ரிலாக்ஸ் கார்னர்!

ஸ்வீடன் நாட்டில் அப்போது பனிக்காலம். அந்நகரத்தின் வழியாக ஒரு கவிஞன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவனை திடீரென்று தெரு நாய்கள் துரத்தின. சிறிது துாரம் ஓடிவிட்டு, நாய்களைத் துரத்த கல்லைக் குனிந்து எடுக்க முயன்றான், கவிஞன். பனிக்காலம் ஆனதால் கற்களும் பனியோடு உறைந்து கிடந்தன. எடுக்க வரவில்லை.'என்னடா இது விசித்திரமாக இருக்கிறது. இந்த நகரத்தில் நாயை அவிழ்த்து விட்டுக் கல்லையெல்லாம் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றனரோ...' என, துன்ப நேரத்திலும் துவளாமல் நகைச்சுவையோடு பேசினானாம். —புலவர் மா.ராமலிங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !