ரிலாக்ஸ் கார்னர்!
பொதுவாக திருடர்களை பற்றிய ஜோக்குகள் பலவிதமாக வருவதுண்டு. அந்த ஜோக்குகளிலும் யதார்த்த உண்மைகள் சில ஊடுருவி நிற்பதை காணலாம். ஒரு வீட்டிற்குள் வந்த திருடன், அந்த வீட்டுக்காரரிடம், 'யோவ் மரியாதையா பீரோ சாவிய கொடுத்திடு. இல்லை நடக்கறதே வேற...' என, கத்தியைக் காட்டி மிரட்டினான். அலட்டிக் கொள்ளாத அந்த வீட்டுக்காரர், 'அட முட்டாப் பயலே, நீ தொழிலுக்குப் புதுசா...' என, கேட்டார்.'எசமான், ஆமாம். எப்படி கண்டுபிடிச்சீங்க...' என்றான், திருடன்.'இதுக்கு பெரிய படிப்பு படிக்கணுமாக்கும். பீரோ சாவிய எங்கிட்ட கேட்கிறயே. எந்த வீட்டிலாவது ஆம்பளை கையில பீரோ சாவி இருக்குமா?' என்றார். —புலவர் மா.ராமலிங்கம்