உள்ளூர் செய்திகள்

நினைவு சின்னமான, எம்.ஜி.ஆர்., வீடு!

கேரளா மாநிலம், பாலக்காடு, வடவன்னுார் கிராமத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., பிறந்த வீடு தான் இது. அவர், நான்கு வயது வரை, இங்கு தான் வாழ்ந்தார். இன்று, இந்த வீடு, நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.இது முழுக்க முழுக்க, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவது, மாநகராட்சி தான். அதேபோல, நினைவுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரிக்கும் பணியை, மாநகராட்சியே செய்து வருகிறது. இங்கு, எம்.ஜி.ஆர்., சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை காட்சி பொருளாக வைத்திருக்கின்றனர்.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !