நடந்தது என்ன?
ஜனவரி 7ல், உலகில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை நினைவு கூர்வோம்:ஜன., 7, 1584ல், ஜூலியன் காலண்டர் முடிவுக்கு வந்து, கிரிகேரியன் காலண்டர் துவங்கிய நாள்.ஜன., 7, 1610ல், ஜுபிடரைச் சுற்றி நான்கு சந்திரன்கள் இருப்பதை கண்டுபிடித்து அறிவித்தார், இத்தாலிய விண்வெளி ஆய்வாளர், கலிலியோ.ஜன., 7, 1914ல், முதல் உலக யுத்தம் துவங்கியது. பிரிட்டன் மீது குண்டு போட உத்தரவிட்டது, ஜெர்மனி. ஜன., 7, 1927ல், வியாபார நோக்கில் தொலைபேசி சேவை, நியூயார்க் மற்றும் லண்டன் இடையே துவக்கப்பட்டது.ஜன., 1953ல், அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன், தன் நாடு வெற்றிகரமாக ஹைட்ரஜன் குண்டு தயாரித்துள்ளது என, அறிவித்தார்.ஜன., 7, 1990ல், பைசா நகர கோபுரம், அளவுக்கு அதிகமாக சாய்ந்து விட்டது எனக் கூறி மூடப்பட்டது. பிறகு, அதிலிருந்த மிகப்பெரிய மணி அகற்றப்பட்டதுடன், புனரமைக்கப்பட்டு, டிசம்பர் 15, 2001ல், மீண்டும் திறக்கப்பட்டது.ஜன., 7, 2013ல், சகாரா பாலைவனத்தை பனி போர்வை போர்த்தியது போல், மேகம் சூழ்ந்து திகிலுாட்டியது.ஜன., 7, 2022ல், அமெரிக்காவை சேர்ந்த 57 வயது மனிதனுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சையாக, பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.ஜனவரி 7, சார்ந்த சில தகவல்களையும் பார்ப்போம்:* உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது* புத்த மதத்தின், மகாயான பிரிவினர், இந்த நாளை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.