துப்பாக்கி கடைகள்!
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றால் ஆண்கள் அனைவரும் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளுடன் நடமாடுவதை காணலாம்.நம் நாட்டில் காய்கறிகள் விற்கும் கடைகள் இருப்பது போல, இங்கு துப்பாக்கி கடைகள் ஏராளமாக உள்ளன. அதில், சிறுவர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் காட்சி, வியக்க வைக்கிறது.துப்பாக்கிகள் மலிவு விலையில் கிடைக்கிறது. இங்கு, ஆயுதங்கள் வைத்திருக்க, 'லைசென்ஸ்' தேவை இல்லை. — ஜோல்னாபையன்