உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

பிப்ரவரி, 4, 1789ல், அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்ற நாள். பிப்., 4, 1922ல், பிரபல ஹிந்துஸ்தானி பாடகர், பீம்சென் ஜோஷி பிறந்தநாள். பிப்., 4, 1938ல், பிரபல கதக் டான்சர், மாஸ்டர், இசையமைப்பாளர், பிர்ஜு மகராஜ் பிறந்தநாள். பிப்., 4, 1938ல், அடால்ப் ஹிட்லர், தன்னைத்தானே, ஜெர்மன் நாட்டு ராணுவத்தின் தலைமை அதிகாரியாக அறிவித்துக்கொண்ட நாள். பிப்., 4, 1948ல், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள். பிப்., 4, 1998ல், ஆப்கானிஸ்தானின் தக்ஹார் சமஸ்தானத்தில், கடும் நில நடுக்கம் ஏற்பட்டு, 2,323 பேர் பலியாகினர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர்.பிப்., 4, 2004ல் 'பேஸ்புக்' வலைதளம் ஆரம்பம்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !