பலவகையான லிங்க வழிபாடு!
* கல்லில் வடித்து, கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், அசல் லிங்கம். * மண், உலோகம், நவரத்தினம், மரம், கல் போன்றவற்றால் செய்யப்படுவது, சல லிங்கங்கள் எனப்படும் அசையும் லிங்கங்கள். அவரவர் கைகளில் வைத்து, எடுத்து சென்று பூஜை செய்யும் வகையில் அளவில் சிறியவையாக இருக்கும். * தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்படுவது, லோஹஜ லிங்கம். * முத்து, பவழம், ஸ்படிகம், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்களால் செய்யப்படுபவை, ரத்னஜ லிங்கம். * லிங்கத்தின் பாணத்தில் சிவ பெருமான் காணப்பட்டால் அது, முகலிங்கம். * அர்ஷ லிங்கம் என்பது, ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அவை அடிப்புறம் சற்றுப் பெருத்து, தேங்காய் வடிவம் போல் இருக்கும்.