உள்ளூர் செய்திகள்

மகளிர் இதழ்கள்!

மகளிர் நலத்திற்காக முதன் முதலில், கி.பி.1860ல், வெளிவந்த இதழ், 'அமிர்தவர்ஷினி!'மகளிருக்காக, இரண்டாவது வந்த இதழ், 1870ல் வெளியான, 'ஜனவிநோதினி!' மூன்றாவதாக, 1886ல், 'விவேக் போதினி!' 1887ல், 'மாதர் மித்திரி' மற்றும் 'மகாராணி' என, இரண்டு இதழ்கள் வந்தன. 1891ல், 'வினோதரச மஞ்சரி, பெண்மதிபோதினி' ஆகியவை வெளிவந்தன. 1899ல், 'மாதர் மனோரஞ்சனி' 1905ல், 'சக்கரவர்த்தினி' 1906ல், 'தமிழ் யாது' 1911ல், 'மாதாபோதினி' 1912ல், 'பெண் கல்வி' 1924ல், 'சிந்தாமணி' 1928ல், 'தமிழ் மகள்' 1936ல், 'மாதர் மறுமணம்' 1937ல், 'கிரகலட்சுமி!'சுதந்திரத்திற்கு பிறகு, 1947ல், 'புதுமைப்பெண்' என்ற இதழ் வெளியாகி மிகவும் சிறப்பாக விளங்கியது. 14 ஆண்டுகளுக்குப் பின், 1961ல், வெளிவந்த மகளிர் இதழ், 'பாக்கியலட்சுமி!''மணமகள்' மற்றும் 'காதம்பரி' இரண்டு இதழ்கள், 1965ல், வெளியாயின. அதற்குப்பின், பல மாதர் இதழ்கள் வெளிவந்துள்ளன. பெண்கள் இதழுக்கு சிறப்பாசிரியரான முதல் பத்திரிகையாளர், பாரதியார். 'சுதேச வர்த்தினி' இதழுக்கு, 13 மாதங்கள் ஆசிரியராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !