உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ஆ. மாடக்கண்ணு, தென்காசி: தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழகத்தில், தேர்தலில் தனித்து நிற்க தயங்குவது ஏன்?தனித்து நின்றால், 'டெபாசிட்' கூட கிடைக்காது என்பதால், கூட்டணியை நாடுகின்றன!    * ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்: தப்பு செய்யும் காவல் துறை அதிகாரிகளை, ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்கின்றனரே... அது என்ன அவ்வளவு பெரிய தண்டனையா?ஆயுதப்படையில் போட்டால், கை நீட்டி வசூலிக்கும் நிலைமை இருக்காதே. அதனால், அந்த பிரிவுக்கு மாற்றுகின்றனர்!   ஆர். பூஜா, சென்னை: தொப்பையை குறைக்காமல் வலம் வருபவர்களை பார்த்தால், என்ன தோன்றும்?அரசுக்கு வருமானம் தர வேண்டும் என்று விரும்புபவர்களாக, உற்சாகபான பிரியர்களாக, 'டாஸ்மாக்'கின் நண்பர்களாக இருக்கின்றனர் என்றே தோன்றும்!    ப. காளிதாசன், நீர்விளங்குளம்: அரசு ஊழியர்கள், அடிக்கடி போராட்டம் நடத்துவதைப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றும்?அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி, ஓட்டு வாங்கி, ஆட்சியைப் பிடிப்பவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னும், நிறைவேற்ற முடியாமல் இருப்பதை நினைத்தால் தான், மனம் வருத்தமடையும்!    எஸ். முருகேசன், மதுரை: யாரை திருத்த முடியும், யாரை திருத்த முடியாது?பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விட முடியும். ஆனால், தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது!    ஆர். மோகன், விழுப்புரம்: எனக்கு வயதாகி விட்டது; என் ஒரே மகனுக்கு நான் என்ன கொடுக்க வேண்டும்?நீங்கள் சேமித்து வைத்த சொத்துக்களை விட, உங்களது நேர்மை, உழைப்பு, மற்றவர்களிடம் காட்டிய அன்பு, இவைகளை சொல்லிக் கொடுங்கள்!    நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'அமைச்சராக இருப்பவர், பின் விளைவு தெரியாமல் பேசலாமா?' என, அமைச்சர் உதயநிதிக்கு, உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதே...சபாஷ்... சரியான குட்டு தான். ஆனாலும், பின் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் தான், இப்படி எல்லாம் பேசுகின்றனர்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !