தொழிலாளர்கள் புலம்பெயர்வது ஏன்?
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து, லட்சக்கணக்கான வாலிபர்கள், தென் மாநிலங்களுக்கு, பிழைப்பு தேடி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு, அங்கு வேலைக்கு தகுந்த கூலி கிடைப்பதில்லை, மனிதாபிமானமற்ற செயல்களுமே காரணம் என்கின்றனர்.நாள் முழுவதும் கடுமையாக உழைத்தால், கிராமங்களில் இவர்களுக்கு கிடைக்கும், கூலி, 100 ரூபாய் மட்டும் தான். படத்தில் காணப்படுவது, சந்தாள் என்ற கிராமம். இதுபோன்ற கிராமங்களில் இன்னும் நாகரிகம் எட்டிக்கூட பார்க்கவில்லை.தென் மாநிலங்களில், இவர்கள் தினம், 1,000 ரூபாய் கூலியாக பெறுகின்றனர். இடை தரகர்கள் சிலர், இவர்களிடமிருந்து கமிஷனும் பெறுவது உண்டு. நாடு கண்டபடி முன்னேறியதாக அரசியல்வாதிகள் கோஷம் போடும்போது, வடமாநில கிராமங்கள் இன்றும் இப்படித்தான் இருக்கின்றன.ஜோல்னாபையன்