உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் மூன்று வேடங்களில், அஜித்!வாலி, சிட்டிசன் மற்றும் அசல் போன்ற படங்களில், இரண்டு வேடங்களில் நடித்த அஜித்குமார், வரலாறு படத்தில், மூன்று வேடங்களில் நடித்தார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தையடுத்து, தான் நடிக்கும், 63வது படத்திலும், அவர் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார்.அந்த மூன்று வேடங்களிலும், 'பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல்' என, வித்தியாசப்படுத்தும் அஜித், 'நெகட்டீவ்' வேடம் ஒன்றில், மொட்டைத்தலை, 'கெட் - அப்'பில் நடிக்கிறார்.— சினிமா பொன்னையா50 வினாடிக்கு, ரூ.5 கோடி சொல்லியடிக்கும், நயன்தாரா!ஹிந்தியில், ஷாருக்கானுக்கு ஜோடியாக, ஜவான் படத்தில் நடித்த பின், தன் படக்கூலியை, ஐந்திலிருந்து பத்து கோடி ரூபாய் என்று, தடாலடியாக உயர்த்தி விட்டார், நயன்தாரா. மேலும், 50 வினாடிகள் மட்டுமே கொண்ட, விளம்பர படங்களில் நடிக்க, ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.அதைப்பார்த்து, 'ஒரு படம் முழுக்க நடிக்க, 10 கோடி ரூபாய், ஒரு நிமிடம் கூட வராத விளம்பர படத்தில் நடிக்க, ஐந்து கோடி ரூபாயா?' என்று வாயை பிளக்கின்றனர்.எலீசாமீண்டும் தமிழில், கங்கனா ரணாவத்!பாலிவுட் நடிகையான, கங்கனா ரணாவத், தமிழில் நடித்த, தலைவி மற்றும் சந்திரமுகி- 2 ஆகிய, இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது. இருப்பினும், இயக்குனர், ஏ.எல்.விஜய், தன் புதிய படத்தில், அவரை, மாதவனுக்கு ஜோடியாக்கி இருக்கிறார். 'கங்கனா ரணாவத், ஒரு சிறந்த நடிகை. தலைவி படத்தில், ஜெயலலிதா வேடத்திற்காக, கடுமையான பயிற்சிகளை எடுத்து, நடித்தார். அப்படத்திற்கு, அவர் கொடுத்த உழைப்பு அசாத்தியமானது. அதன் காரணமாகவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளேன்...' என்கிறார், இயக்குனர் விஜய்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!பாலிவுட்டில், இரண்டு படங்கள் கிடைத்ததும், தென்னிந்திய படங்களை குறைத்து, அங்கு முழுமையாக களமிறங்கினார், பையா நடிகை. அப்படி அவர் நடித்த, ஒரு படம், 'பைனான்ஸ்' பிரச்னையில், கிடப்பில் உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.அதோடு, இதுவரை, அந்த படத்தில் நடித்ததற்கான படக்கூலி கூட கொடுக்கப்படவில்லை. இதனால், தாய்மொழி சினிமா தனக்கு, 'செட்' ஆகாது என்று சொல்லி, மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு, 'விசிட்' அடித்துள்ளார், அம்மணி. ****எல்.சி.யு., இயக்குனரின் கைவசம், பல மெகா நடிகர்களின் படங்கள் இருந்தபோதும், கடைசியாக, தளபதி நடிகரை வைத்து அவர் இயக்கிய, இரண்டு எழுத்து படம், மோசமான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனால், அவரிடம் ஏற்கனவே கதை கேட்டுள்ள நடிகர்கள் பயப்பட துவங்கி விட்டனர்.குறிப்பாக, அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்கும், உச்ச நடிகர், ஏற்கனவே சொன்ன கதையை மீண்டும் ஒருமுறை, காட்சி வாரியாக தனக்கு சொல்லுமாறு, எல்.சி.யு., இயக்குனருக்கு உத்தரவு போட்டுள்ளார்.உச்ச நடிகருக்கு நம்பிக்கை போய் விட்டதால், மற்ற நடிகர்களும், தன் மீது நம்பிக்கை இழந்து, 'கால்ஷீட்' தராமல் கைவிரித்து விடுவரோ என்ற அச்சத்தில் இருக்கிறார், எல்.சி.யு., இயக்குனர்.உச்ச நடிகரை வைத்து அடுத்து இயக்கும் படம், 'ஹிட்' அடித்தால் மட்டுமே, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டில், சிக்கி இருக்கிறார். சினி துளிகள்!* ஏற்கனவே, ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ள, த்ரிஷா தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும் படத்தின் மூலம், பாலிவுட்டில், 'ரீ - என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.* சிங்கப்பூர் சலுான் படத்தில், கவுரவ வேடத்தில் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து, ஒரு படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கப் போகிறார்.* ஜெயிலர் படத்தில், ஹாவாலா பாடலுக்கு நடனமாடிய பின், 'ஹீரோயினி' வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்க, தான் தயாராக இருப்பதாக சொல்லி, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார், தமன்னா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !