இங்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை!
படத்தில் காண்பது, இந்தோனேஷியாவில், 'பயான்' என்ற கிராமத்திலுள்ள மக்களின் திருமண விழா கொண்டாட்டம் தான். முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழும் இங்கு, மற்ற முஸ்லிம் மக்களை போன்று, சமூக கட்டுப்பாடுகளை பின்பற்றுவது இல்லை. இவர்கள் விருப்பத்துக்கு ஆடை அணிகின்றனர்.பெண்கள், பொட்டு வைப்பதுண்டு. ஆண்கள், வண்ண வண்ண லுங்கியை கட்டுகின்றனர். இவர்கள் பெரும்பாலும், இரண்டு பெண்களை மணக்கின்றனர். யாராவது இரண்டு மனைவியரை மணக்கவில்லை என்றால், 'அடடே... ஒண்ணு தானா...' என, ஏளனமாக கேட்பர். ஆண்களும், பெண்களும், இங்கு மது அருந்துகின்றனர். —ஜோல்னாபையன்