கவிதைச்சோலை - போடுங்கய்யா ஓட்டு!
நோட்டாவுக்கு போட்டாலும்பரவாயில்லைஓட்டே போடாமல் இருப்பதுசரியல்ல...கட்டாயம் ஓட்டு போடுவது கடமைபோடாவிட்டால் என்ன என்பது மடமை!ஓட்டு உரிமை யாவருக்கும் பொதுவுடமைஓட்டளித்தல் ஜனநாயகக் கடமைஓட்டு உரிமை நம்முடைய சொத்துஓட்டளிப்பது ஒன்று தான்வாக்காளனின் கெத்து!உன்னோட தலைவனுக்கு ஒரு ஓட்டு போட்டுஉயிரோடு நீ இருப்பதை உலகுக்குக் காட்டுஒவ்வொரு ஓட்டுக்கும்உயிர் இருக்கு மறவாதேஉயிர் உனக்கு இருக்கிறதென்றால்ஓட்டுப் போடத் தவறாதே!வாக்காளர் அட்டை இருப்பிடச் சான்றுஓட்டளித்தேன் என்பதுஇருப்பதற்கு சான்றுஉன்னோட ஓட்டு பொன்னான ஒண்ணுமறக்காமல் போய்ப் போடு முன்னாடி நின்னு!உன்னோட ஓட்டு உனக்காகக் காத்திருக்குநீ போய் போட்டால் தான்அதற்கான மதிப்பிருக்கும்நம்மோட ஓட்டு நமக்கான உரிமைஓட்டளிக்க மறந்தால் நாமொரு அடிமை!எவர் ஆண்டால் எனக்கென்னஎன்று மட்டும் இருக்காதேஉன்னுடைய ஒரு ஓட்டைஒருபோதும் மறக்காதேநல்லா இருக்கணும் நாடு என்றால்ஓட்டுப் போட்டுக் காட்டுநல்ல குடிமகனுக்கு அதுதானேஎடுத்துக்காட்டு!மறக்காமல் ஓட்டளிக்கஉறுதிமொழி எடுப்போம்ஓட்டளிக்க மறக்கும் வழக்கத்தைஒழிப்போம்!— கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி.