உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உறவினரின் சபாஷ் ஐடியா!உறவினர் மகளுக்கு, வரன் பற்றி கூறி, விசாரித்துக் கொள்ளுமாறு கூறினார், தரகர். உறவினரும், நானும், வரனின் ஊருக்கு புறப்பட்டோம். அங்கு, இளைஞர் ஒருவரிடம் விசாரித்தார், உறவினர்.உறவினரிடம், 'வரன் குறித்து, இளைஞர்களிடம் விசாரிப்பதற்கு பதில், பெரியவர்களிடம் விசாரிக்கலாமே...' என்றேன்.'வரன் குறித்து, இளைஞர்களிடம் கேட்டால் தான் உண்மை நிலை தெரிய வரும். வரன், வேறு பெண்ணை காதலிக்கிறாரா, சூதாட்டம் மற்றும் மது அருந்துவது போன்ற கெட்ட சகவாசங்கள் இருக்கிறதா போன்ற விஷயங்கள் தெரிய வரும்.'பொதுவாக, உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர் இளைஞர்கள், பொது இடம் மற்றும் கட்டை சுவர்களில் அமர்ந்து, இதுபோன்ற விஷயங்களை விவாதிப்பதுண்டு. பெரியவர்களுக்கு, இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. வரனின் தாய் - தந்தை மற்றும் குடும்பம் குறித்த தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரியும்...' என்றார்.வரன் சரி கிடையாது. கெட்ட சகவாசங்கள் உள்ளதாக, வரன் வழக்கமாக செல்லும் மதுபான கடை மற்றும் விடுதிகளின் அடையாளங்களை, நேரம் வாரியாக கூறினான், அவ்வூர் இளைஞன். இதை உறுதிபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினோம்.இளைஞர் கூறிய இடங்களுக்கு சென்று, ரகசியமாக வரனை கண்காணித்தோம். அவர் கூறியதுபோல், வரன் அவ்விடங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக வந்ததை கண்டு, பெரும் அதிர்ச்சியடைந்தோம். 'உங்களது ஐடியா, உங்க பெண்ணை காப்பாற்றி விட்டது...' என, உறவினரை பாராட்டினேன். பெண் பிள்ளைகள் வைத்திருப்போர், இந்த ஐடியாவை பின்பற்றுங்கள்!ப. சிதம்பரமணி, கோவை.பேக்கரி கடைக்காரரின் நல்லெண்ணம்!தெரிந்த இளைஞர் ஒருவர், பேக்கரி கடை நடத்துகிறார். அவர் தயாரித்து வழங்கும், பேக்கரி பொருட்களின் ருசியும், தரமும் மட்டுமின்றி, இன்னொரு விஷயத்திற்காகவும் பிரபலம்.சுற்று வட்டத்திலுள்ள, மகளிர் சுய உதவி குழு மகளிருக்கும், விருப்பமுள்ள குடும்ப தலைவியருக்கும், பேக்கரியில், பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் தயாரிக்க, பயிற்சியளிக்கிறார்.அவரிடம் பயிற்சி பெற்ற பலரும், தனியாகவோ, ஒன்றிணைந்தோ, குடிசை தொழிலாகவோ, பேக்கரி பொருட்களை தயாரித்து, கடைகளில், 'ஆர்டர்' தருபவர்களுக்கும் வழங்கி, வருமானம் ஈட்டுகின்றனர்.இதுபற்றி அவரிடம் கேட்டேன்.'பெண்களுக்கு, கல்வி மட்டுமின்றி, ஏதேனும் சுய தொழிலில் பயிற்சி கொடுப்பதும் அவசியம். அப்போது தான், அவர்கள் யாரையும் சாராமல், சொந்த காலில் நிற்கவும், தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து வாழவும் முடியும்...' என்றார்.தான் மட்டும் வாழ எண்ணாமல், பெண்களின் வாழ்க்கை உயர, நல்லெண்ணத்தோடு, பேக்கரி தொழிலில் பயிற்சியளித்து வரும் இளைஞரை, அனைவருமே பாராட்டுகின்றனர்.- இந்திராணி ஆறுமுகம், புவனகிரி, கடலுார்.பயனுள்ள கோடை பயிற்சி!சமீபத்தில், தோழியை பார்த்து வர, அவள் வசிக்கும் வெளியூருக்கு சென்றிருந்தேன். அங்கு, அவள் கூறிய தகவல், வியக்க வைத்தது. எங்கள் பகுதியிலுள்ள தலைமை தபால் நிலையம் சார்பில், ஆண்டுதோறும் கோடை விடுமுறையில், பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடை காலப் பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம்.அந்த முகாமில், ஸ்பான்சர்கள் மூலமாக, ஆர்வமுள்ள மாணவ - மாணவியருக்கு, இலவசமாக அஞ்சலட்டை வழங்கி, கடிதம் எழுத பயிற்சி தருவதோடு, உணவும் ஏற்பாடு செய்வர்.மேலும், இந்தியா மற்றும் உலக நாடுகளில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகள் குறித்து, விளக்கமாக எடுத்துரைத்து, அவற்றை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சேகரிப்பு முறைகள் குறித்தும், வழி காட்டி உதவுவர்.பயிற்சியின் ஒரு கட்டமாக, தபால்துறை குறித்த வினாடி - வினா நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசும், சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இதேபோல், மற்ற பகுதி தபால் நிலையங்களிலும் பின்பற்றலாமே... செய்வார்களா? -எஸ்.நாகராணி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !