நடந்தது என்ன?
ஏப்ரல் - 14, 1865 - ஆபிரகாம்லிங்கன் சுடப்பட்ட நாள்.* 1891 - இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை, அம்பேத்கர் பிறந்தநாள்.* 1894 - தாமஸ் ஆல்வா எடிசன், தான் கண்டுபிடித்த ஒலிப்படக் கருவியை காட்சிப்படுத்தினார்.* 1907 - எம்.ஆர்.ராதா பிறந்த நாள்.* 1912 - டைட்டானிக் கப்பல், வட அட்லாண்டிக் கடலில், பனிப் பாறையில் மோதிய நாள். அடுத்த நாள், 1,503 பேருடன் மூழ்கியது.* 1950 - ரமண மகரிஷி காலமானார்.* 1962 - இந்திய பொறியாளர், எம்.விஸ்வேஸ்வரய்யா இறந்த நாள்.* 1986 - வங்கதேசம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில், 1 கிலோ எடை கொண்ட ஆலங்கட்டி மழை பொழிந்ததில், 92 பேர் உயிரிழந்தனர்.