உள்ளூர் செய்திகள்

சம்மார் ஸ்பெஷல் - கோடையை குளிர்விக்க...

பாதாம் பிசின் பானம்! பாதாம் பிசினை இரவு முழுக்க ஊற வைத்து, தண்ணீரில் கலந்து, சில துளிகள் லெமன், தேன் கலந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு இதன் ருசி ரொம்பவே பிடிக்கும். நெல்லி ஜூஸ்!பெரிய நெல்லி மற்றும் இஞ்சியை அரைத்து வடிகட்டி, லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்து குடித்தால், கல்லீரல் சுத்தமாகிவிடும். கம்பங்கூழ்! கால்சியமும், வைட்டமின் டியும் இருப்பதால், எலும்புகள் வலுவாகும். எடை மற்றும் அதிக கொழுப்பு குறையும்.துளசி விதை ஜூஸ்!நாட்டு மருந்து கடைகளில் துளசி விதை கிடைக்கும். துளசி விதையை ஊறவைக்கவும். இதனுடன், துளசி இலை அரைத்தெடுத்த சாறு, கொஞ்சம் தேன் கலந்து குடிக்க, எதிர்ப்பு சக்தி எக்கச்சக்கமாக கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !