உள்ளூர் செய்திகள்

இறுதி சடங்கு பயிற்சி வகுப்புகள்!

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, இறுதி சடங்குகள் முறைப்படி செய்ய, பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள் இருக்கின்றன. இங்கல்ல, அமெரிக்காவில் உள்ள கல்லுாரிகளில் இதற்கான வகுப்புகள் உண்டு. எல்லா தொழிலும் நலிவடைந்தாலும் உடல்கள் அடக்கம் செய்யும் தொழிலுக்கு எப்போதும் மவுசு இருக்கும். இது, 'பியூனரெல் சர்வீஸ்' வகுப்பு என, அழைக்கப்படுகிறது. இக்கல்லுாரிகளில் ஏராளமான மாணவ - மாணவியர், இந்த வகுப்புகளில் சேருகின்றனர். இந்த வகுப்பில், கெமிஸ்ட்ரி, பயாலஜி, எம்பாமிங், அக்கவுன்டன்சி, இறுதி சடங்கு பற்றிய புரிதல் மற்றும் கவுன்சிலிங் போன்ற அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. தேர்வானவர்களுக்கு, 'பியூனரெல் இயக்குனர், எம்பாமர், சிமிட்டரி கேர் டேக்கர், பியூனரெல் அரேஞ்சர்' போன்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவர்கள் வேலைக்கு சேர்ந்தால், மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !