உள்ளூர் செய்திகள்

ஒயின் தயாரிக்கும் பெண்கள்!

ஆஸ்திரேலியா நாட்டில், பெர்த் அருகில் உள்ள ஸ்வான் என்ற பிரதேசம் முழுவதும் திராட்சை கொடிகள் நிறைந்து, திராட்சை பழங்கள் தான் காட்சி அளிக்கிறது. அனைவர் வீட்டு வாசல்களிலும் திராட்சை கொடிகளில் பழங்கள் தொங்கும் அருமையான காட்சியை காணலாம்.திராட்சை பழங்களை கால்களால் மிதித்து பதப்படுத்தி, தரமான ஒயின் தயாரிக்கின்றனர், இங்குள்ள பெண்கள். 1829ல், தாமஸ் வாட்டர்ஸ் பெர்த் என்பவர், சவுத் கில்டுபோர்ட் ஒலிவு என்ற தோட்டத்தில் முதல் முதலாக திராட்சை செடிகளை பயிரிட்டதாக சரித்திரம் கூறுகிறது. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !