உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

குப்பை மேட்டில் உருண்டு புரளும், தனுஷ்!ராயன் படத்தை இயக்கி, நடித்து முடித்திருக்கும், தனுஷ், தற்போது தன், 51வது படமான, குபேராவில் நடித்து வருகிறார். இந்த படத்தில், பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பதால், அவர் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள், குப்பை மேட்டில் தான் படமாக்கப்பட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு நாளும், 10 மணி நேரத்துக்கு மேலாக, குப்பை மேடுகளில் உருண்டு, புரண்டு நடித்துக் கொண்டிருக்கிறார், தனுஷ். இந்த காட்சிகளை படமாக்க, தற்போது, குபேரா படக் குழு, மும்பையில் உள்ள, தாராவி பகுதியில் முகாமிட்டிருக்கிறது.சினிமா பொன்னையாரூ. 45 கோடிக்கு வீடு வாங்கிய, நடிகை!தமிழில், மிஷ்கின் இயக்கிய, முகமூடி என்ற படத்தில் அறிமுகமானார், மும்பை நடிகை, பூஜா ஹெக்டே. அதை அடுத்து, தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், நீண்ட இடைவேளைக்குப் பின், மீண்டும், விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்தார்.அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அதையடுத்து, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் நடித்த படங்களும், அடுத்தடுத்து தோல்வியடைந்து, ராசி இல்லாத நடிகை என்ற பட்டியலில் சேர்ந்து விட்டார், பூஜா ஹெக்டே. இருப்பினும், சமீபத்தில், மும்பையில் அவர், 45 கோடி ரூபாய்க்கு, வீடு வாங்கி இருக்கிறார். இந்த செய்தி வெளியானதை அடுத்து, 'ஒரு படத்தில் நடிப்பதற்கே, இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர், எப்படி, 45 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினார்...' என்று, திரை உலகினர் பலரும், அவரை, ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.— எலீசாஆவணப்படம் எடுக்கும், ஐஸ்வர்யா ரஜினி!லால் சலாம் படத்தை இயக்கிய, ஐஸ்வர்யா ரஜினி, அடுத்து, கேரளாவைச் சேர்ந்த, சிபி மேத்யூ என்ற மருத்துவர் குறித்த, ஆவண படத்தை எடுத்து வருகிறார்.புற்றுநோய் நிபுணரான இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். புற்று நோயாளிகள் பலரை அதிலிருந்து மீட்க, இவர் போராடி இருக்கிறார்.அவரது அந்த போராட்டங்களை கண் முன் நிறுத்தும் விதமாக, இந்த ஆவண படத்தை எடுத்து வரும், ஐஸ்வர்யா ரஜினி, 'டாக்டர் மேத்யூவுடன் பணியாற்றி, ஓய்வு பெற்ற செவிலியர்கள் மூலமாக, தகவல்களை திரட்டி, இந்த படத்தை எடுத்து வருகிறேன்...' என்கிறார்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!பாலிவுட்டில், ஒரு படத்தில் நடித்துள்ள, மூனுஷா நடிகையை, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க பேச்சு நடத்தி வந்தனர். ஆனால், அந்த படத்தில், மூனுஷாவை, 'டூ பீஸ்' உடை அணிந்து நடிக்க வேண்டும்; ஒரு பாடல் காட்சியில், ஆபாச நடனம் ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இதனால், அதிர்ச்சி அடைந்த மூனுஷா, 'கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறதே என்பதற்காக, என், 'இமேஜை' கெடுத்துக் கொள்ள முடியாது. வேறு நடிகையை பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று, அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.சினி துளிகள்!* பொன்னியின் செல்வன், லியோ படங்களில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய த்ரிஷா, தற்போது, தன் படக்கூலியை, 12 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார்.* 'இறைவன் மற்றும் அன்னபூரணி போன்ற படங்கள் தோல்வியடைந்து, என்னை ஏமாற்றிவிட்டது, இருப்பினும் அடுத்து, என் நடிப்பில் திரைக்கு வரும், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படம், கண்டிப்பாக, வெற்றி படமாக அமையும்...' என்கிறார், நயன்தாரா.* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 171-வது படத்தில், அவரது மகளாக, கமலின் மகள், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !