சுடு நீர் குளங்கள்!
ஆப்பிரிக்காவில் உள்ள மிகவும் பழமையான நாடு எத்தியோப்பியா. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், நாடு முழுவதும் ஏராளமான எரிமலைகள் இருந்தன. இந்த எரிமலைகள் கால போக்கில் வெடித்து சிதறி, நாட்டின் பல பாகங்களில் சிறியதும், பெரியதுமான குளங்களும், ஏரிகளும் உருவானது.இவைகளில் இன்றும் சுடு தண்ணீர் தான் இருக்கிறது. சில ஏரிகளில் சூடு கடுமையாக இருப்பதால் உயிரினங்கள் அருகில் செல்வதில்லை. சில குளங்களில் மட்டும் வெது வெதுப்பான சுடு நீர் இருப்பதால், மனிதர்கள் இதில் இறங்கி குளிக்கின்றனர். இதில் குளிப்பதற்கு என்றே சுற்றுலா பயணியர் வருகின்றனர்.— ஜோல்னாபையன்