நகரும் மரம்!
அமேசான் காடுகளின், 60 சதவீதம் பிரேசில் நாட்டில் இருக்கிறது. இங்கு, 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் காணப்படாத மரங்களும், செடி வகைகளும் இங்கு இருக்கின்றன.'காஸ்போனேர்' என்ற மரத்தை, 'வாக்கிங் பாம் ட்ரீ ' என்று கூறுகின்றனர். இந்த சிறு மரம், இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருக்குமாம். இது ஒரு ஆண்டில், 20 மீட்டர் துாரம் நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உலகிற்கு தேவையான ஆக்சிஜன் அளவில்,6 முதல் 9 சதவீதம், அமேசான் காடுகளிலிருந்து தான் கிடைக்கிறது.ஜோல்னாபையன்