இதப்படிங்க முதல்ல...
பட்டைய கிளப்பப்போகும், கமல் - சிம்பு!தன் படங்களில் எப்போதுமே குத்து பாட்டுகள் வைப்பதில்லை, இயக்குனர் மணிரத்னம். தற்போது, கமல், சிம்புவை வைத்து, தான் இயக்கி வரும், தக்லைப் படத்தில், மாஸான குத்து பாடல் வைத்திருக்கிறார்.இந்த பாடலுக்காக, ஏ.ஆர்.ரகுமானை பல, 'டியூன்'கள் போட வைத்து, அதில், ஒன்றை ஓ.கே., செய்துள்ளார். இந்த பாடலில், கமலையும், சிம்புவையும் போட்டி போட்டு பட்டைய கிளப்பும் அளவுக்கு அதிரடி நடனமாட வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.சினிமா பொன்னையாதனுசை துரத்தும், சம்யுக்தா மேனன்!தனுசுக்கு ஜோடியாக, வாத்தி படத்தில் நடித்த, மலையாள நடிகை சம்யுக்தா மேனனுக்கு அதன் பின், தெலுங்கில் படங்கள் கிடைத்த போதும், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.இந்நிலையில் படங்களில் நடிப்பதோடு, இயக்குனராகவும் செயல்பட்டு வரும், தனுஷை, சமீபத்தில் சந்தித்தார், சம்யுக்தா. அவர் இயக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டதோடு, சில இயக்குனர்களிடத்திலும், தனக்கு சிபாரிசு செய்யுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். — எலீசாவிஜய் நாயகிக்கு வந்த, 'வேல்யூ!'விஜய் ஆண்டனியுடன், கொலை படத்தில் நடித்து, தமிழில் அறிமுகமானவர், மீனாட்சி சவுத்ரி. அதையடுத்து, ஆர்.ஜே.பாலாஜியுடன், சிங்கப்பூர் சலுான் என்ற படத்தில் நடித்தார். தற்போது, விஜய்க்கு ஜோடியாக, கோட் படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக, சில மேல்தட்டு, 'ஹீரோ'கள், மீனாட்சியை வட்டம் போடத் துவங்கியுள்ளனர்.அதனால், லட்சங்களில் படக்கூலி வாங்கிய அம்மணி, தற்போது, கோடிகளை சொல்லி அடிக்கத் துவங்கியுள்ளார். 'மற்ற மொழிகளை விட, தமிழுக்கே முதலிடம் கொடுத்து நடிக்கப் போகிறேன்...' என்று, கோலிவுட்டில், 'டேரா' போட்டுள்ளார், நடிகை.எலீசா'ரூட்'டை மாற்றிய, ராமராஜன்!எம்.ஜி.ஆரை போன்று, கடைசி வரை, 'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த, ராமராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடித்து வெளியான, சாமானியன் படம் தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக, 'இனிமேலும், 'ஹீரோ'வாக நடித்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த மாட்டேன். என் சமகாலத்து நடிகர்களான பிரபு, சரத்குமார் மற்றும் சத்யராஜ் என, பலரும் நடித்து வருவது போன்று, குணச்சித்ர வேடங்களில் நடிப்பதற்கு தயாராகி விட்டேன்...' என்கிறார், ராமராஜன்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தளபதி நடிகர், முழு நேர அரசியலுக்கு வரப்போவதால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும், அரசியலில் விட்டு விடுவாரோ என, பயப்பட துவங்கி விட்டனர். அதன் காரணமாக, 'உங்கள் வாரிசு இரண்டு பேர் பெயரிலும், முக்கிய சொத்துக்களை எழுதி வையுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு எதுவும் இல்லாமல் போய் விடக்கூடாது...' என்று, கொடி பிடித்து வருகிறார், நடிகரின் வீட்டு அம்மணி. இதனால், தன் தந்தை குலத்தை அழைத்து, 'இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டலாம்...' என்று, தளபதி நடிகர், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.***** தாரா மற்றும் மூனுஷா நடிகைகளுக்கிடையே, மீண்டும் தொழில் முறை போட்டி வெடித்துள்ள நிலையில், தாரா நடிகை நடித்த, 'ஹிட்' படத்தின், இரண்டாம் பாகத்தை தற்போது தட்டி துாக்கி இருக்கிறார், மூனுஷா.இந்த படத்தில், மீண்டும் நடிப்பதற்காக தன்னிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோது, '10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்...' என, அடம்பிடித்து வந்தார், தாரா நடிகை.இந்த செய்தி, மூனுஷாவின் காதுகளை எட்டியதையடுத்து, 10 கோடி ரூபாயில் இருந்து, மூன்று லகரங்களை கம்மி பண்ணி, அந்த வாய்ப்பை தட்டி துாக்கி விட்டார். இதன் காரணமாகவே, தாரா, மூனுஷாவுக்கிடையே மீண்டும் திரைக்குப்பின், மோதல் வெடித்து நிற்கிறது.****சினி துளிகள்!* காந்தாரி என்ற படத்தில் நடிக்கும் ஹன்சிகா, பழங்குடியின பெண் வேடத்திற்காக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கருப்பு நிறத்துக்கு மாறியுள்ளார்.* ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா நடித்த, மூக்குத்தி அம்மன் படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்க, 'கமிட்' ஆகியுள்ளார், த்ரிஷா.* அட்லி இயக்கத்தில் நடித்த, மெர்சல் படத்தை தொடர்ந்து, தற்போது நடித்து வரும், கோட் படத்திலும், மூன்று வேடத்தில் நடித்து வருகிறார், விஜய்.அவ்ளோதான்!