உள்ளூர் செய்திகள்

நுாறாண்டு பழமையான, டீ கடை!

கடந்த, 103 ஆண்டு பழமையான இந்த குடிசை வீட்டில், மூன்று தலைமுறையாக, டீ கடை ஒன்று இயங்கி வருகிறது. அப்போது இருந்த தோற்றத்திலேயே இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள, பாடூர் கிராமத்தில் செயல்படும் இந்த கடையை, சுனி என்பவர் நடத்தி வருகிறார். இவருடைய முன்னோர்களால் துவங்கப்பட்டு, இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கடைக்கு, அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து கூட, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். காலை 5:00 முதல், இரவு 7:00 மணி வரை, கடை திறந்து இருக்கும். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !