உள்ளூர் செய்திகள்

நம்மிடம் இருக்கு மருந்து - கருப்பட்டி!

* பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட, நமக்கு கிடைத்த அருமருந்து தான், கருப்பட்டி.* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது* சர்க்கரைக்கு பதிலாக, கருப்பட்டி காபி குடிக்கலாம். * கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேனி பளபளப்படையும்* சீரகத்தை வறுத்து, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்* ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்கும்* கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்கள், எலும்புகள் உறுதியாகும்* நீரிழிவு நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் கருப்பட்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்*   சுக்கு, கருப்பட்டி, பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது* குழந்தை பெற்ற பெண்கள், சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும்* உடல் இயக்கத்தையும், சீரான சக்தியையும் சம நிலையில் வைக்கிறது, கருப்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !