உள்ளூர் செய்திகள்

வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு...

பாடகர் ஜேசுதாசுக்கு, வெள்ளை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஆடைகள், காலணிகள் மற்றும் கைக்கடிகாரத்தின் ஸ்டிராப் என எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கான காரணத்தை கூறும் போது, 'இளமையில், வறுமையில் வாழ்ந்த போது, விதவிதமான ஆடைகள் அணிய முடியவில்லை. வெள்ளை- சட்டை, வேட்டியை தினமும் துவைத்து அணிவேன். அதிலிருந்தே வெள்ளை நிறம், எனக்கு பிடித்த கலராக மாறிவிட்டது...' என்கிறார். தான் அணியும் பொருட்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், தலைமுடியும், தாடியும் கறுப்பாக இருக்க வேண்டும் என்று, சாயம் பூசி வந்தவர், சமீபத்தில், அப்பழக்கத்தையும் விட்டு விட்டார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !