உள்ளூர் செய்திகள்

யார் யார் எப்படி பேசுவர்!

* கிரிக்கெட் வீரர், 'ஓவரா' பேசுவார்.* ரவுடி, 'அடிச்சு' பேசுவார்.* ஓட்டல் சர்வர், 'சூப்'பரா பேசுவார்.* வக்கீல், 'பீஸ்'புல்லா பேசுவார்.* பாஸ்ட் புட் ஓனர், 'காரசாரமா' பேசுவார்.* ஐஸ் விற்பவர், 'குளிர குளிர' பேசுவார்.* டெய்லர், 'கட்' செய்து பேசுவார்.* மீன் வியாபாரி, 'நாறடித்து' பேசுவார்.* கண்டக்டர், 'நடந்து நடந்து' பேசுவார்.* டிரைவர், 'நிறுத்தி நிறுத்தி' பேசுவார்.* பூக்கடைக்காரர் வார்த்தையை, 'அளந்து' பேசுவார்.* டயட்டீஷியன், 'உப்பு சப்பில்லாமல்' பேசுவார்.* பேங்க் மேனேஜர், 'இன்ட்ரஸ்ட்'டா பேசுவார்.* பியூட்டீஷியன், 'அழகாக' பேசுவார்.* எலக்ட்ரீஷியன், 'ஷாக்' அடிச்ச மாதிரி பேசுவார்.* புகைப்பட நிபுணர், 'டெவலப்' செய்து பேசுவார்.* பால் வியாபாரி, பழம் நழுவி, 'பாலில்' விழுவது போல் பேசுவார்.* கணக்கு வாத்தியார், 'கூட்டி குறைத்து' பேசுவார்.- மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்... அவர் தான், 'அரசியல்வாதி!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !