உள்ளூர் செய்திகள்

அடையாறுக்கு ஏன் அந்த பெயர்?

மலையில் தோன்றாமலும், இடையிலே தோன்றிக் கடலை அடையாமலும் உள்ள சிற்றாறுகள் பல. சென்னையை இரு கூறாகப் பிரிப்பதும், அரசுத் தலைமை அலுவலகம் கோட்டையருகே கடலில் சேரும் ஆறு, கூவம் ஆறு. அடையாறு என்பது, திருஞானசம்பந்த பெருமான், மயிலாப்பூரிலே எலும்பைப் பெண்ணுருவாக்கித் திருவான்மியூருக்கு போகும் வழியில், சிறிது நேரம் அடியார்களுடன் தங்கி இளைப்பாறிய ஆறு ஆதலால், 'அடியார் ஆறு' என்ற பெயர் பெற்றது. இப்போது அடையாறு என, பெயர் மருவி வழங்குகிறது என்பர், ஆராய்ச்சி அறிஞர்கள். அக்காலத்தில் இது கடற்காடாக இருந்தது. மந்தைவெளி பாக்கத்துக்கு அடுத்து தெற்கே இருந்த இக்காடு, இப்போது மாடமாளிகைகளுடனே பொலிவுற்று விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !