உள்ளூர் செய்திகள்

மதுக்கடையிலும் பெண்கள்!

தமிழகத்தில், மதுபான கடையை, 'டாஸ்மாக்' என்று குறிப்பிடுவது போல், கேரளாவில், 'பிவரேஜ் ஷாப்' என்பர். அத்துடன், கேரளாவில், மது விற்பனையாளர்களிடம் மரியாதையுடன் தான் பேச வேண்டும்; அதேபோல், விற்பனையாளர்களும் தரக்குறைவாக பேச முடியாது; பேசினால், வேலை போய் விடும். இப்போது, பெண்களையும், மது விற்பனையாளர்களாக பணியில் அமர்த்தி வருகிறது, கேரள அரசு. தைக்காட்டுசேரியில் உள்ள மது விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார், படத்தில் உள்ள இப்பெண்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !