உள்ளூர் செய்திகள்

உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம்!

சீனாவில் உள்ள ஹுமன் மாகாணத்தில், இரண்டு உயரமான மலைத் தொடர்களுக்கு இடையே, 984 அடி உயரத்தில் கண்ணாடியிலான தொங்கும் பாலத்தை அமைத்து, சாதனை படைத்துள்ளனர், சீனர்கள். மிக தடிமனான கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம், 1,400 அடி; உலகிலேயே மிக உயரமான இக்கண்ணாடி பாலத்தை சமீபத்தில், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு, 800 பேருக்கு மட்டுமே, இப்பாலத்தை கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கட்டணம், 2,000 ரூபாய்! — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !