வங்கியில் அதிகாரி வாய்ப்பு
மகாராஷ்டிரா வங்கியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஜெனரல் ஆபிசர்' பிரிவில் 500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/ சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., வயது: 22-35 (31.7.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118. கடைசிநாள்: 30.8.2025 விவரங்களுக்கு: bankofmaharashtra.in