உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கே.எம்.எப்., தலைவர் பதவி எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா உறுதி

 கே.எம்.எப்., தலைவர் பதவி எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா உறுதி

கோலார்: ''முதல்வர் சிவகுமார் எனக்கு, கே.எம்.எப்., தலைவர் பதவி வழங்குவார்,'' என, நம்பிக்கை உள்ளதாக, மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா கூறினார். கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சித்தராமையா முதல்வராக இருந்த போது, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு, எனக்கும், பீமா நாயக்கிற்கும் இடையே போட்டி இருந்தது. இறுதியில் பீமா நாயக் தலைவர் ஆக்கப்பட்டார். அந்த நேரத்தில் எனக்கு தலைவர் பதவி வழங்குவதில், தற்போதைய முதல்வர் சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும் ஆதரவாக இருந்தனர். பீமா நாயக் பதவி காலம் முடிந்ததும், என்னை தலைவர் ஆக்குவதாக சித்தராமையாவும் உறுதி அளித்திருந்தார். பீமா நாயக் பதவி பல மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில், கே.எம்.எப்., தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவியை எனக்கு சிவகுமார் வழங்குவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை