உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்

பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்

கோலார்: பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் மாயமானதால் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், முத்தியாளபேட் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். இவருக்கு மோனிகா, 14, தனுஸ்ரீ, 11, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் முல்பாகலில் உள்ள, ஞானவாஹினி பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை சகோதரிகள் இருவரும், பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை என, தந்தைக்கு தகவல் வந்தது. சிறுமியர் வீட்டுக்கும் திரும்பவில்லை. கலக்கமடைந்த பெற்றோர், கிராமத்தின் சுற்றுப்பகுதி, பள்ளியின் சுற்றுப்பகுதிகளில் தேடியும், அவர்களை பற்றி தகவல் இல்லை. பள்ளிக்கு சென்ற சிறுமியர், மர்மமான முறையில் மாயமாகி உள்ளனர். அவர்களாகவே எங்கோ சென்றனரா அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை