உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புறாவை பிடிக்க முயற்சித்து மாடியில் இருந்து விழுந்த சிறுவன்

 புறாவை பிடிக்க முயற்சித்து மாடியில் இருந்து விழுந்த சிறுவன்

கொப்பால்: புறாவை பிடிக்க சென்ற 6 வயது சிறுவன், முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொ ப்பால் நகரில் வசித்து வருபவர் அப்பாஸ் அலி. இவரின் மகன் முகமது ஹாரிஸ், 6. நேற்று முன்தினம் வீட்டிற்குள் விளையாடி கொண்டிருந்த சிறுவன், வீட்டின் பால்கனியில் புறா வந்து அமர்ந்ததை பார்த்துள்ளார். புறாவை பிடிப்ப தற்காக ஓடிய சிறுவன், தடுமாறி, முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். மகன், கீழே விழுந்ததை பார்த்த பெற்றோர் பதறியடித்து கீழே ஓடினர். அதே வேளையில், அப்போது சாலையில் அவ்வழியாக வந்தவர்கள் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், தலையில் படுகாயம் ஏற்பட்டு உள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொப்பால் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை