உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 40 வயது பெண் பலாத்காரம் உ.பி., மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

40 வயது பெண் பலாத்காரம் உ.பி., மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

தேவனஹள்ளி : பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில், பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த, உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்.எல்.ஏ., பகவான் சர்மா மீது வழக்கு பதிவாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், டிபாய் தொகுதியில் 2 007ல் பகுஜன் சமாஜ், 2012ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.எல்.ஏ., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பகவான் சர்மா, 51. தற்போது சிவசேனா கட்சியில் உள்ளார். இவர் மீது நேற்று முன்தினம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 40 வயது பெண், பெங்களூ ரு விமான நிலைய போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: முன்னாள் எம்.எல்.ஏ., பகவான் சர்மா வற்புறுத்தல் காரணமாக, என் 14 வயது மகனுடன் கடந்த 14ம் தேதி பெங்களூரு வந்தேன். நகரின் பல இடங்களுக்கு பகவான் சர்மா என்னை அழைத்துச் சென்றார். கடந்த 16ம் தேதி சித்ரதுர்கா சென்றோம். அன்றைய தினம் இரவு பெங்களூரு அழைத்து வந்தார். விமான நிலைய பகுதியில் உள்ள, நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார். நான் எதிர்ப்பு தெரிவித்தபோ து கொலை மிரட்டல் விடுத்ததுடன், வலுக்கட்டாயமாக என்னை பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டு இருந்தது. இந்த புகாரின்படி பகவான் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்ப, போலீசார் தயாராகி வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை