உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெலகாவி சட்டசபை கூட்டத்துக்கு ரூ.21 கோடி செலவாகும் என கணிப்பு

 பெலகாவி சட்டசபை கூட்டத்துக்கு ரூ.21 கோடி செலவாகும் என கணிப்பு

பெலகாவி: சுவர்ண விதான் சவுதாவில், டிசம்பர் 8 முதல் 19ம் தேதி வரை நடக்கவுள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடருக்கு, 21 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து, பெலகாவி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் டிசம்பர் 8 முதல் 19 வரை, குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 21 கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு 15.30 கோடி ரூபாய் செலவானது. ஆண்டு தோறும் கூட்டத்தொடர் செலவு, 10 சதவீதம் அதிகரிப்பது சகஜம். கட்டுப்பாடில்லை கடந்த 2023ல் 17 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், 23 கோடி ரூபாய் செலவானது. 2024ல் இந்த செலவுகளை கட்டுப்படுத்தி, 15.30 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இம்முறை செலவுகளை கட்டுப்படுத்த, நாங்கள் முயற்சிக்கவில்லை. உணவுக்கும், பாதுகாப்புக்கும் அதிகம் செலவிடப்படும். டில்லியில் சமீபத்தில் காரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. எனவே பெலகாவி கூட்டத்தொடரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 4,000 போலீசார் நியமிக்கப்படுவர். இம்முறை 6,000 போலீசார் நியமிக்கப்படுவர். அதேபோன்று, உணவுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும், மாநிலத்தின் அந்தந்த பகுதி சிறப்பு உணவுகள் இடம் பெறும். சோள ரொட்டி, அரிசி ரொட்டி, சப்பாத்தி, பல விதமான சட்னி, மூன்று விதமான காய்கறி கூட்டு, பொரியல், தயிர் சாதம், மசாலா சாதம், பருப்பு அல்வா, ஜாமூன், ரசமலாய் உட்பட பல உணவு மெனுக்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 4,100 அறைகள் கடந்த முறை மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்களின் அன்றாட உணவுக்கு தினமும் 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இம்முறை அந்த செலவு இரட்டிப்பாகும். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை, மேல்சபை அமைச்சக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மார்ஷல்கள், வாகனங்களின் ஓட்டுநர்கள் பெலகாவி நகரில் தங்க வேண்டியிருக்கும். தினமும் இங்கிருந்து, சுவர்ண விதான் சவுதாவுக்கு செல்வர், இவர்கள் தங்குவதற்கு, 4,100க்கும் மேற்பட்ட அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை