மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
5 minutes ago
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால், கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும், மைசூருக்கும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மைசூரு அரண்மனையின் முக்கிய நுழைவு வாயில் முன், நேற்று முன்தினம் இரவு ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பலுான் வியாபாரி சலீம், 40, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண் பலி அந்த நேரத்தில், அவ்வழியாக நடந்து சென்ற மைசூரு நஞ்சன்கூடின் மஞ்சுளா, 30, பெங்களூரின் லட்சுமி, கொல்கட்டாவின் ஷாஹினா, ஹாவேரி ராணிபென்னுாரின் கோட்டரேஷி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளாவும், ஷாஹினாவும் நேற்று முன்தினம் இரவே இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் மறுத்தார். மஞ்சுளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார். ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் இறந்தார். இதனால், சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தடயங்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த, தடய அறிவியல் ஆய்வகத்தினர் தடயங்களை சேகரித்து எடுத்து சென்றனர். உயிரிழந்த சலீம் குறித்து விசாரித்த போது, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், 15 நாட்களுக்கு முன் சிலருடன் மைசூரு வந்து, இங்குள்ள லாட்ஜில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. தினமும் காலை பலுான் வியாபாரம் செய்ய சலீமும், மற்ற இருவரும் சைக்கிளில் சென்று உள்ளனர். ஆனால், நேற்று முன்தினம் சலீம் மட்டுமே பலுான் வியாபாரம் செய்ய அரண்மனை பக்கள் சென்றுள்ளார். மற்ற இருவரும் செல்லவில்லை; இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், மைசூரில் நாச வேலையில் ஈடுபட சதி நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சலீமுடன் லாட்ஜில் தங்கி இருந்த இருவரை பிடித்து, எப்போது நீங்கள் மைசூரு வந்தீர்கள்; பலுானுக்கு காற்று அடைக்க பயன்படுத்தும் ஹீலியம் சிலிண்டரில் என்னென்ன திரவ பொருட்களை சேர்த்தீர்கள் என்பது உட்பட பல கேள்விகளை கேட்டு, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். ஆலோசனை ஹீலியம் சிலிண்டர் வெடித்தது குறித்து, மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கரிடம் இருந்து, பெங்களூரு என்.ஐ.ஏ., அதிகாரிகளும் தகவல் சேகரித்து உள்ளனர். அவர்கள் இன்று மைசூரு வந்து விசாரணை நடத்த உள்ளனர். இச்சம்பவம் எதிரொலியாக போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், மைசூரு நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டார். இந்நிலையில், சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, கர்நாடக சமூக நல அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மஹாதேவப்பா நேற்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பட்டியல் பின், அவர் அளித்த பேட்டி: பலுான் வியாபாரி சலீம், சீசன் நேரத்தில் இங்கு வந்து பலுான் வியாபாரம் செய்து உள்ளார். சைக்கிளில் வைத்து அவர் எடுத்து சென்ற ஹீலியம் சிலிண்டரில் வெப்பம் அதிகமாக இருந்ததால் வெடித்து சிதறி உள்ளது. ரசாயன பொருட்களை பயன்படுத்தி, எந்த பொருட்களையும் தயாரிக்க அனுமதி இல்லை. சிலிண்டர் வெடிப்பு எதிர்பாராதவிதமாக நடந்து உள்ளது. இது ஒரு ஒரு பாடம். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும். இவ்வழக்கில் மைசூரு போலீசாரிடம் இருந்து, என்.ஐ.ஏ., தகவல் பெற்று உள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் விசாரணை நடத்துவர். சீசன் நேரத்தில் மைசூருக்கு பொருட்கள் விற்பனை செய்ய வரும், வெளிமாநில வியாபாரிகள் தொடர்பான பட்டியல் எங்களிடம் உள்ளது. இதுபோன்ற இன்னொரு சம்பவம் மைசூரில் நடக்கவே கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
5 minutes ago